Sunday 17 March 2013

அம்மா திட்டம் கோவையில் 19-ம் தேதி துவக்கம்

கோவை மாவட்டத்தில் அம்மா திட்டத்தில் வருகிற 19-ந் தேதி அனைத்து வட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராமங்கள் கீழ்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை தெற்கு வட்டத்தில் நரசீபுரம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் அம்மா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதேபோல் கோவை வடக்கு மாவட்டத்தில் நெ.24.வீரபாண்டியில் நடைபெறும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலரும், கிணத்துக்கடவு வட்டம் காட்டம்பட்டியில் பொள்ளாச்சி சப்-கலெக்டரும், அன்னூர் வட்டத்தில் பிள்ளையப்பம் பாளையத்தில் நடைபெறும் விழாவில் வருவாய் கோட்டாட்சியரும், சூலூர் வட்டம் கம்மாளப்பட்டியில் நடைபெறும்.

விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், பொள்ளாச்சி சேத்துடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், வால்பாறையில் மாவட்ட வழங்கல் அலுவலரும், மேட்டுப்பாளையம் வட்டத்தில் தோலம்பாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) ஆகியோர் கலந்து கொண்டு அம்மா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

அம்மா திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை வட்டாட்சியர்கள் தலைமையிலான குழுவினர் அக்கிராம மக்களின் பொதுவான குறைகளை தெரிவிக்கும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து கோரிக்கையினை பொறுத்து அந்த இடத்திலேயே நிறைவேற்றவும், முடிவு செய்யப்படாத விண்ணப்பங்களின் பேரில் சம்பந்தப்பட்ட துறை மூலமாக நிவாரணம் பெறவும் தமிழக முதலமைச்சரின் அம்மா திட்டத்தின் மூலம் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்களால் தொடங்கி வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment