Saturday, 28 December 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கோவையில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள், வர்த்தக நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்த தகவல்களை ஓரே தளத்தில் தொகுக்கும் முயற்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தோம்.

இன்று தினமும் ஆயிரக்கணக்கான கோயம்புத்தூர் நண்பர்கள் கோவையின் நிகழ்வுகளை விரல் நுனியில் பெற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு விழாக்களிலும் நேரில் சந்திக்கிற நண்பர்களில் பலரும் கோவை ஹேப்பனிங்ஸ் தளத்தின் மூலம் விழாச் செய்தியினைத் தெரிந்து கொண்டோமென சொல்வது பெருமிதம் அளிக்கிறது. அறிவுலகச் செயல்பாடுகளை முன்னின்று நடத்தும் அமைப்பாளர்களுக்கு எங்களால் ஆன சிறு கைங்கர்யமாகவே இதற்குச் செலவிடும் நேரத்தை கருதுகிறோம்.

கோவை ஹேப்பனிங்ஸ் பயனீட்டாளர்கள் அனைவருக்கும் அர்த்த மண்டபத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

arthamandapam@gmail.com

No comments:

Post a Comment