Tuesday, 10 December 2013

வரும் 2014-15ம் கல்வியாண்டில்கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைமுறை கல்வி முறையில் பி.எட்., படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் இளங்களை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும், இளங்கலை மற்றும் முதுகலையில் பொருளாதாரம், வணிகவியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.bu.ac.inஎன்ற பல்கலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, 2014-ம் ஆண்டு பிப்., 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment