Saturday, 3 August 2013

இன்றும், நாளையும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்

கோவையில், இன்றும், நாளையும், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள மண்டல வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில், வருவாய் கணக்கைத் தாக்கல் செய்ய, ஏழு சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.ஆண்டுக்கு இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருவாய் ஈட்டுபவர்கள், "ஆன்-லைன்' மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ, வருமான வரிக் கணக்கை, தாக்கல் செய்ய வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் சம்பளதாரர்கள், வர்த்தகர்கள் அனைவரும், "ஆன்-லைனில்' மட்டுமே, தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, வரும் 5ம் தேதி வரை, கால அவகாசத்தை நீட்டித்து, மத்திய நிதி அமைச்சகம், கடந்த 31ம் தேதி, அறிவித்தது. இந்நிலையில், மத்திய அரசின் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு வருவதால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியுமா என்ற, சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரித்தபோது,"சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (இன்றும், நாளையும்), வருமான வரித்துறை அலுவலகத்தில் திறக்கப்பட்ட சிறப்புக் கவுன்டர்கள் இயங்கும்' என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment