மாநிலத்தில் செயல்படும் அனைத்து வகை
பள்ளிகளிலும் வருகின்ற 23ம் தேதி செஸ்
போட்டிகள்
நடக்க உள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்களின் திறமையும், ஆற்றலையும்
வளப்படுத்துவதற்கு சிந்திக்கும் திறனை மேம்படுத்துவது அவசியம் என்ற நோக்கில் 7 முதல் 17 வயதுள்ள பள்ளி
செல்லும் மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உபகரணங்களும் அனைத்து
பள்ளிகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செஸ் விளையாட்டு
குறித்த பயிற்சிகள் மாநில, மாவட்ட அளவில் ஆசிரியர்
களுக்கு
வழங்கப்பட்டதுடன் மாணவர்களும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தற்போது, ஒவ்வொரு பள்ளிகளிலும் வரும் 23ம் தேதி செஸ்
போட்டிகள் நடத்தவேண்டும் என்று தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இப்போட்டிகள்
ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும், 8ம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்கள் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும் பங்கேற்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி சுமார் 45 ஆயிரம் பள்ளிகளில் இப்போட்டிகள் மாநிலம்
முழுவதும் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment