கோவையில் கடந்த மூன்று கல்வியாண்டுகளில்
மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி படித்து வெளியேறிய மாணவ மாணவியர்களுக்கு, பழகுனர்
பயிற்சிக்கான நேர்காணல், பெரியகடைவீதி புனித மைக்கேல் மேல்நிலை பள்ளியில் ஆக., 23ல் நடக்கிறது.
சென்னை "போர்ட் ஆப் அப்ரன்டிஸ்ஷிப்
டிரெயினிங்' இயக்குனரால், சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதலின் படி நேர்காணல்
நடக்கிறது. இந்த நேர்காணல் முகாமில் அரசு போக்குவரத்துக்கழகம், பி.எஸ்.ஜி.,மருத்துவமனை, ஐ.ஓ.பி.,வங்கி, தாய்கோவங்கி, பிரேக்ஸ் இந்தியா, என்.எஸ்.ஐ,சி., போன்ற முன்னனி
நிறுவனங்கள் பங்கேற்று, மாணவர்களை தொழிற்பயிற்சிக்காக தேர்வு செய்கின்றன.
இம்முகாமில்
பங்கேற்க விருப்பமுள்ள மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி பயின்ற மாணவ மாணவ மாணவியர்
தங்களைப்பற்றிய சுயவிபரம்,பிளஸ் 2 தேர்வு பெற்றதற்கான சான்று, அதன் இரு நகல்கள், இரண்டு பாஸ்போர்ட்
அளவு போட்டோக்களின் ஆக., 23 காலை 8.00 மணிக்கு மைக்கேல் பள்ளியில் ஆஜராக வேண்டும்.
No comments:
Post a Comment