மாணிக்கவாசகர், திருவாசகம் பிறந்த கதை பற்றி அறிய வாதவூரன் எனும் தலைப்பில், தமிழ் நாடக உலகம் இதுவரை கண்டிராத, கேட்டிராத வகையில், ஒரு மாபெரும் இசைக் காவியமாக வாதாவூரன் நாடகம் உருவாகி உள்ளது.
சிறந்த தயாரிப்பு, சிறந்த இசை, சிறந்த குழந்தை நட்சத்திரம் போன்ற பல விருதுகளைப் பெற்ற இந்நாடகம் மீண்டும் கோவையில் நடத்தப்படுகிறது.
வாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், இளம் வயதிலேயே பாண்டிய மன்னரால் இனம் காணப்பட்டு, நாட்டின் முதலமைச்சராய் உயர்ந்தவர். ஒரு நாட்டின் ஆளுமைத் திரனுக்கு உற்ற துணையாக, பாண்டியனுக்கு, பணிபுரிந்த மாணிக்கவாசகருக்கு, ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக படையின் பலம் பெருக்கும் நோக்குடன், குதிரைகள் வாங்கும் பணியின் நிமித்தம், அவர் கோடியக்கரை செல்ல நேர்கிறது. வழியில், ஆவுடையார் கோவிலில், இறைவனை தரிசிக்க சென்றவருக்கு, ஒரு இக்கட்டான நிலை. கோவிலின் நிலையைக் கண்டு, மனதில் ஒரு எண்ணம் உதிக்கிறது.
படை வாங்க வந்த பணத்தில், கோவில் கட்டலாம் என்ற எண்ணம். ஓர் உந்துதலில், அவர் கோவிலைச் சீரமைக்கிறார். குதிரை வாங்க மறுக்கிறார். பாண்டியன் செய்தி அறிந்து அவரை கைது செய்து சித்ரவதை செய்கிறான். மாணிக்கவாசகர், குதிரைகள் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்.
ஆவுடையார் கோவிலில் அவருக்கு உந்துதல் ஏற்பட்டது எவ்வாறு? கோவில் கட்டச் சொன்னது யார்? குதிரைகள் வரும் என்ற நம்பிக்க கொடுத்தது யார்? வாதவூரர் செய்த செயல் சரியா? இறைவனின் தரிசனம் அவருக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது? இறைவனுக்காக அவர் ஏங்கியது ஏன்? இந்தக் கேள்விகளை அடுக்கி, விடைகளை அளிக்கிறது இந்நாடகம்.
நாள்: ஆக. 17 & 18, 2013
இடம்: கோவை கலையரங்கம்.
No comments:
Post a Comment