Monday 15 July 2013

பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் "வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிப்பு' பயிற்சி ஜூலை 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.

இப்பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார் நிலைபானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார், பழமிட்டாய் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.


ஆர்வமுள்ளவர்கள் ரூபாய் ஆயிரம் செலுத்தி, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பயிற்சி கட்டணம் செலுத்த இயலாதவர்கள் கட்டணத்தொகையை வரைஓலை மூலம் முதன்மையர், வேளாண்மை பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைபின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை-3 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

No comments:

Post a Comment