Saturday 13 July 2013

தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய அளவிலான இளைஞர் விருது - 2013 பெறுவதற்கு 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி விவேகானந்தர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிப்பணி மேற்கொள்ளும் இளைஞர்கள் (13 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள்) மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கவுரவிக்கும் விதத்தில் தேசிய இளைஞர் விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இவ்விருது பெற விருப்பமுள்ள இளைஞர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறாமல் சமுதாயத்தொண்டு செய்திருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து மூன்று நகல்களுடன், கருத்துருக்களை ஜூலை 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யும்.

2012-13ம் நிதியாண்டில் சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட விளையாட்டு அலுவலர்,

நேரு விளையாட்டு அரங்கம், கோவை.

No comments:

Post a Comment