Wednesday 17 July 2013

ஆதார் அடையாள அட்டை... இன்று (18/07/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

மத்திய மண்டலம்

வார்டு 25 (பழைய வார்டு 36,47) - மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, தேவாங்கர் ரோடு.
வார்டு 45 (பழைய வார்டு 66) - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சங்கனூர்.
வார்டு 48 (பழைய வார்டு 69) – ஆரம்பப்பள்ளி, ரத்னபுரி.
வார்டு 49 (பழைய வார்டு 67,68) – மேல்நிலைப்பள்ளி, ரத்னபுரி
வார்டு 74 (பழைய வார்டு 13) – எம்.ஜி.ஆர். சத்துணவு, அபிராமி நகர் மற்றும் சிவராம்நகர் சமுதாயக்கூடம்.

மேற்கு மண்டலம்

வார்டு 13 (பழைய வார்டு 61) – மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்.
வார்டு 14 (பழைய வார்டு 60) – மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) – மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர்.

வடக்கு தாலுகா (கூடலூர்)

வார்டு 10,11,12,13 – ஆரம்பப்பள்ளி, தெற்குப்பாளையம்
வார்டு 9,14,15,16 – ஆரம்பப்பள்ளி, புதுப்புதூர்
வார்டு 8,17,18 – ஆரம்பப்பள்ளி, ஜி.கவுண்டம்பாளையம்.
வார்டு 4,5,6,7 – ஆரம்பப்பள்ளி, சாமிச்செட்டிபாளையம்.
வார்டு 1,2,3,4 – ஆரம்பப்பள்ளி, திருமலைநாயக்கன்பாளையம்.
வார்டு 9,10,15 – ஆரம்பப்பள்ளி, பழைய புதூர்.
வார்டு 1 – ஆரம்பப்பள்ளி செல்வபுரம்.

மேட்டுப்பாளையம் நகராட்சி

வார்டு 22 – காட்டூர் நகராட்சி துவக்கப்பள்ளி

முகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், கால தாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுநர் உரிமம், முதியோர் உதவித் தொகை ஆணை, மாற்றுத் திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம்.

முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.



No comments:

Post a Comment