Showing posts with label 22-07-2013. Show all posts
Showing posts with label 22-07-2013. Show all posts

Monday, 22 July 2013

எம்.சி.ஏ.-எம்.பி.ஏ. முதுகலை படிப்புகளுக்கு கவுன்சிலிங்

தொழில் நுட்பக் கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ முதுகலை பட்டப்படிப்பிற்கு 2013-2014-ஆம் கல்வியாண்டிற்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் (www.gct.ac.in) வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறுகிறது. எம்.சி.ஏ. முதுகலைப் படிப்புக்கு 22-7-2013 முதல் 3-8-2013 வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு 4-8-2013 முதல் 14-8-2013 வரையிலும் கலந்தாய்வு நடைபெறும்.

நாமஸங்கீர்த்தன திருவிழா

பஜனோத்ஸவம் - 2013

நாமஸங்கீர்த்தன திருவிழா

நாள்: ஜுலை 22 முதல் 28 வரை
இடம்: ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர், கோவை.










நிகழ்ச்சிகள்:

நாள்: ஜூலை 22
காலை 5 மணி – ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்
காலை 8 மணி – வேத பண்டிதர்களின் உபநிஷத் பாராயணம்
மாலை 4 மணி – நாமஸங்கீர்த்தனம் கோவை செல்வி பத்மப்ரியா குழுவினர்
மாலை 6.30 மணி – நாமஸங்கீர்த்தனம் ஸ்ரீ கார்த்திக் ஞானேஸ்வரர் குழுவினர்

நாள்: ஜூலை 23
மாலை 4 மணி – நாமஸங்கீர்த்தனம் போத்தனூர் செல்வி பிரியதர்ஷினி குழுவினர்
மாலை 6.30 மணி – நாமஸங்கீர்த்தனம் திருவனந்தபுரம் ஸ்ரீ சங்கர் குழுவினர்

நாள்: ஜூலை 24
மாலை 4 மணி – நாமஸங்கீர்த்தனம் த்ரிவிக்ரம நாராயண பஜனை மண்டலி, சிங்காநல்லூர், கோவை.
மாலை 6.30 மணி – நாமஸங்கீர்த்தனம் செல்வி ரஸிகா பிரசாத் குழுவினர், திருச்சி.

நாள்: ஜூலை 25
காலை 9 மணி – தோடயமங்களம் – குருத்யானம் ஸ்ரீ ராம்நகர் பஜனை கோஷ்டி ஸ்ரீ பரசுராம பாகவதர் குழுவினர்.
காலை 11.30 மணி – நாமஸங்கீர்த்தனம் – பத்ராசல ராமதாஸர் கீர்த்தனைகள் ஸ்ரீ ஞானானந்த பஜனை மண்டலி ஸ்ரீ K V நடராஜ பாகவதர் குழுவினர்.
மதியம் 2 மணி – புரந்தரதாஸர் கீர்த்தனைகள் – குறிச்சி ஸ்ரீ பாலசுப்ரமணிய பாகவதர் குழுவினர்.
மாலை 4 மணி – மீரா பஜன்ஸ், ஊத்துக்காடு கீர்த்தனைகள் – கோவை ஸ்ரீ கணபதி ராம பாகவதர் குழுவினர்.
மாலை 6.30 மணி – நாமஸங்கீர்த்தனம் – கோழிக்கோடு ஸ்ரீ பிரசாந்த் வர்மாஜி.

நாள்: ஜூலை 26
காலை 9 மணி – ஸ்ரீ நாராயணீயம் ஸ்ரீமதி மைதிலி ராமநாதன் குழுவினர்
மதியம் 2 மணி – ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பஞ்சரத்ன கீத்தனைகள் (கடலூர் ஸ்ரீ சுப்ரமணியம் இயற்றியது) ஸ்ரீமதி மோகனா கிருஷ்ணன் குழுவினர்.
மாலை 4 மணி – திருப்புகழ் கோவை ஸ்ரீ வைத்தியநாத பாகவதர் குழுவினர்.
மாலை 6.15 மணி – திவ்யநாம ஸங்கீர்த்தனம் ஆயக்குடி ஸ்ரீ குமார் பாகவதர் குழுவினர்.

நாள்: ஜூலை 27
காலை 9 மணி – ஜயதேவர் அருளிய அஷ்டபதி மஹாகாவியம் டாக்டர் ஸ்ரீ கணேஷ் பாகவதர் குழுவினர்.
மாலை 4 மணி – ஸ்ரீ நாராயண தீர்த்த தரங்கிணி மயிலை ஸ்ரீ ராஜாராமன் – ஸ்ரீ பட்டாபிராமன் சகோதரர்கள் ஸ்ரீ நாராயண மூத்தி பக்த ஸமாஜம், சென்னை.
மாலை 6 மணி – திவ்யநாம ஸங்கீர்த்தனம் ஸ்ரீ AVK ராஜஸிம்ம பாகவதர் குழுவினர் அபிநயம் ட்ரெஷரி ஸ்ரீ பாலு பாகவதர்.

நாள்: ஜூலை 28
காலை 8 மணி – உஞ்சவ்ருத்தி பஜன்
காலை 9 மணி – ஸ்ரீ பத்மாவதி கல்யாண மஹோத்ஸவம் கோவை ஸ்ரீ ஜெயராம பாகவதர் குழுவினர் அபிநயம் ஸ்ரீ ஜானகிராம பாகவதர்.
மதியம் 2 மணி – நாமஸங்கீர்த்தனம் சென்னை பக்தஸ்வரா பஜனை மண்டலி
மாலை 4 மணி – பவ்வளிப்பு, வசந்தோத்ஸவம் ஆஞ்சநேய உற்சவம் ஈரோடு ஸ்ரீ ராஜாமணி பாகவதர் குழுவினர்.

முக்கிய நிகழ்ச்சியாக, ஜூலை 22 முதல் 24 வரை, காலை 9.30 மணி முதல் 20 பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் பஜனைப் போட்டி நடைபெறும்.



ஆதார் அடையாள அட்டை... இன்று (22/07/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம்

வார்டு 37 (பழைய வார்டு 3) – தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாந்கராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) – பீளமேடுபுதூர் மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி.
வார்டு 57 (பழைய வார்டு 10) – எம்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) – காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி. 
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.
வார்டு 60 (பழைய வார்டு 5) – ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு மற்றும் வடக்கு.

மேற்கு மண்டலம்

வார்டு 13 (பழைய வார்டு 61) – மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்.
வார்டு 14 (பழைய வார்டு 60) – மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) – மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர்.

தெற்கு மண்டலம்

வார்டு 76 (பழைய வார்டு 55) – முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும் செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) – செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி, சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) – செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி.


மேட்டுப்பாளையம் நகராட்சி

வார்டு 24 – கேர்வெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 28,33 – ஜி.எம்.ஆர்.பி., நடுநிலைப்பள்ளி
வார்டு 30 – நடூர் துவக்கப்பள்ளி

காரமடை பேரூராட்சி

வார்டு 1 – ஆயர்ப்பாடி துவக்கப்பள்ளி
வார்டு 16 – காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி
வார்டு 17, 18 – மங்களக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி

வார்டு 1, 2, 3 – ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு 4, 5, 13 – கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு 6, 7, 8 ,9 ,10, 11, 12, 14, 15 – ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு 16, 17, 18 – பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி


முகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், கால தாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுநர் உரிமம், முதியோர் உதவித் தொகை ஆணை, மாற்றுத் திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம்.

முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

Friday, 19 July 2013

Thinking through the Law for Entrepreneurs



Thinking through the Law for Entrepreneurs

The Indus Entrepreneurs will organise a session on “Thinking through the Law for Entrepreneurs”

Date: July 22, 2013
Time: 4.30 p.m. to 7.30 p.m.
Venue: Senator 1, The Residency, Coimbatore.

For more details, call: 96292 00022