Showing posts with label Counselling for MCA and MBA. Show all posts
Showing posts with label Counselling for MCA and MBA. Show all posts

Monday, 22 July 2013

எம்.சி.ஏ.-எம்.பி.ஏ. முதுகலை படிப்புகளுக்கு கவுன்சிலிங்

தொழில் நுட்பக் கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ முதுகலை பட்டப்படிப்பிற்கு 2013-2014-ஆம் கல்வியாண்டிற்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் (www.gct.ac.in) வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறுகிறது. எம்.சி.ஏ. முதுகலைப் படிப்புக்கு 22-7-2013 முதல் 3-8-2013 வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு 4-8-2013 முதல் 14-8-2013 வரையிலும் கலந்தாய்வு நடைபெறும்.