Wednesday 16 October 2013

மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்

மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்: இணையதளத்தில் இனி விண்ணப்பிக்கலாம்

மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஸ்போர்ட் மையங்களில், வரும், 21ம் தேதி முதல், விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படுகிறது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், நாட்டின் பாதுகாப்புக் கருதி பாஸ்போர்ட் வழங்குதில், புதிய தொழில் நுட்பங்களை அமல்படுத்தியுள்ளது. இதற்காக, பாஸ்போர்ட் சேவகேந்திரா மையங்களை, ஆங்காங்கே துவங்கியது.


அதில், தமிழகத்தில், சென்னை மண்டலத்தில் சாலிகிராமம், தாம்பரம், அமைந்தக்கரை; மதுரை மண்டலத்தில், மதுரை, திருநெல்வேலி; திருச்சி மண்டலத்தில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், பாஸ்போர்ட் சேவகேந்திரா துவங்கப்பட்டுள்ளது. இங்கு, 'ஆன்-லைன்' வசதி மற்றும், 'பயோ மெட்ரிக்' பதிவு செய்யும் வசதி உள்ளது.

அதையொட்டி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில், புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் இயங்கி வந்த பாஸ்போர்ட் மையங்களில், விண்ணப்பம் வாங்குவதை, வரும் 21ம் தேதியோடு நிறுத்திக் கொள்ளுமாறும், அதன்பிறகு, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் விண்ணப்பங்களை மட்டும் வாங்கி, மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன், உத்தரவிட்டுள்ளார். இதனால், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் எடுக்க, இனி, சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவகேந்திராவிற்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment