Saturday, 21 September 2013

கைத்தறி கண்காட்சி

இந்தியாவில் சேலை ரகங்களில், கைத்தறிக்கு தனி பாரம்பரியம் உள்ளது. தற்போது கைத்தறியில் பல விதமான வண்ணங்கள், டிசைன்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. காஞ்சீவரம், தர்மாவரம், போச்சம்பள்ளி, பனாரஸ், ஜம்தானி, ஜமாவார் உள்ளிட்ட பாரம்பரிய பட்டு வகைகள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உ.பி., மற்றும் குஜராத் மாநிலங்களில் புகழ்பெற்றவை. கைத்தறி நெசவு பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதுடன் மிகப்பெரிய குடிசைத் தொழிலாக விளங்குகிறது. தற்போது இத்தொழிலை மேற்கொண்டு வருவோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும், வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது படைப்புகள் நேரடியாக சென்றடையும் வகையிலும், இந்த கைத்தறி கண்காட்சி துவங்கியுள்ளது.


நாள்: செப் 24, 2013 வரை.
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம்: சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு, கோவை.




Commercial Dance Music


Friday, 20 September 2013

Wedding Vibes


Shobana’s Krishna

Shobana’s Krishna

Dance Drama

Date: Sept 29, 2013
Time: 6.05 pm
Venue: Kalai Arangam, R.S.Puram, Coimbatore.

For tickets: 98841 52200
Ticket @ Hall 9.30 am to 7.00 pm



தீராப்புதிர்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & அருவி

தீராப்புதிர்

மாமல்லபுரத்துப் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்சா.பாலுசாமி

நிகழ்வின் தொடக்கத்தில் இத்தாலிய சிற்பக்கலை மேதை பெர்னினியின் படைப்புலகம் குறித்த ஆவணப்படம் மிகச் சரியாக காலை 10.10 மணிக்கு திரையிடப்படும்.

நாள்: செப் 22, 2013
நேரம்: காலை 10.10 மணி
இடம்: ஆர்த்ரா ஹால், ஹூசூர் சாலை, அண்ணா சிலை அருகில்.

தொடர்புக்கு : 9442101335 I aruvikovai@gmail.com I www.aruvimeet.blogspot.com


(அனுமதி இலவசம்)

ஸ்மார்ட் கார்டு... நாளை (21-09-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 


மேற்கு மண்டலம்

வார்டு எண் 10: சாய்பாபா மிஷன் பள்ளி, சாய்பாபா காலனி.
வார்டு எண் 16: மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி. 
வார்டு எண் 17: அரசு உயர்நிலைப்பள்ளி, கல்வீரம்பாளையம்.

வடக்கு மண்டலம்

வார்டு எண் 41:மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணியகாரம் பாளையம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம். அரசு உயர்நிலைப்பள்ளி, காந்தி மாநகர்; சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, சத்தி ரோடு, கணபதி.
வார்டு எண் 44: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அன்னையப்பன் வீதி, நல்லாம்பாளையம்.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமசாமிநகர், கவுண்டம்பாளையம்.
வார்டு எண் 47: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கணபதி.
வார்டு எண் 55: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.
மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புலியகுளம்.


தெற்கு மண்டலம்


மாநகராட்சியின் 94வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளி (மாச்சாம்பாளையம்) குறிச்சி.

தமிழ்த்தாய் விருதுக்கு அழைப்பு

தமிழ் வளர்ச்சித்துறை

தமிழ்த்தாய் விருதுக்கு அழைப்பு

தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கபிலர், உ.வே.ச., உமறுப்
புலவர், ஜி.யு.போப் பெயரில் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

 
இவ்விருதுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அமைப்பு ஒன்றை தேர்வு செய்து தமிழ்த்தாய் விருதையும் வழங்குகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழர் பண்பாடு, நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் செயல்படும் சிறந்த தமிழ் அமைப்புக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 



இதற்கு ஐந்து லட்ச ரூபாயும் அதற்கேற்ற தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியுடையவர்கள், சுயவிபரக்
குறிப்பை , உதவி இயக்குனர், தமிழ்வளர்ச்சித் துறை, கலெக்டர் அலுவலக வளாகம், கோவை- 18 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.