Showing posts with label PG Application. Show all posts
Showing posts with label PG Application. Show all posts

Monday, 22 July 2013

முதுநிலை விண்ணப்பம் ஆக., 14 கடைசி



தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

முதுநிலை விண்ணப்பம் ஆக., 14 கடைசி

தமிழ்நாடு வேளாண் பல்கலையிலுள்ள திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இரண்டாமாண்டு முதுநிலைப் பட்டப்படிப்பில் எம்.பி.ஏ., (வணிகமேலாண்மை), எம்.எஸ்.சி., (சுற்றுச்சூழல் மேலாண்மை), எம்.எஸ்.சி., (கரும்பு தொழில்நுட்பங்கள்) ஆகிய மூன்று பாடத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

ஏதேனும் இளநிலை பட்டம் முடித்த அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆக., 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.tnau.ac.in என்ற பல்கலை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு, 94890 51046, 94421 11048 என்ற அலைபேசி மூலமாகவோ அல்லது odl@tnau.ac.in என்ற முன்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.