Showing posts with label 23-07-2013. Show all posts
Showing posts with label 23-07-2013. Show all posts

Monday, 22 July 2013

முதுநிலை விண்ணப்பம் ஆக., 14 கடைசி



தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

முதுநிலை விண்ணப்பம் ஆக., 14 கடைசி

தமிழ்நாடு வேளாண் பல்கலையிலுள்ள திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இரண்டாமாண்டு முதுநிலைப் பட்டப்படிப்பில் எம்.பி.ஏ., (வணிகமேலாண்மை), எம்.எஸ்.சி., (சுற்றுச்சூழல் மேலாண்மை), எம்.எஸ்.சி., (கரும்பு தொழில்நுட்பங்கள்) ஆகிய மூன்று பாடத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

ஏதேனும் இளநிலை பட்டம் முடித்த அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆக., 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.tnau.ac.in என்ற பல்கலை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு, 94890 51046, 94421 11048 என்ற அலைபேசி மூலமாகவோ அல்லது odl@tnau.ac.in என்ற முன்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.


ஆதார் அடையாள அட்டை... இன்று (23/07/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம்

வார்டு 37 (பழைய வார்டு 3) – தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாந்கராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) – பீளமேடுபுதூர் மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி.
வார்டு 57 (பழைய வார்டு 10) – எம்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) – காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி. 
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.
வார்டு 60 (பழைய வார்டு 5) – ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு மற்றும் வடக்கு.

மேற்கு மண்டலம்

வார்டு 13 (பழைய வார்டு 61) – மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்.
வார்டு 14 (பழைய வார்டு 60) – மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) – மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர்.

தெற்கு மண்டலம்

வார்டு 76 (பழைய வார்டு 55) – முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும் செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) – செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி, சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) – செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி.


பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி

வார்டு 1, 2, 3 – ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு 4, 5, 13 – கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு 6, 7, 8 ,9 ,10, 11, 12, 14, 15 – ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு 16, 17, 18 – பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி

முகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், கால தாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுநர் உரிமம், முதியோர் உதவித் தொகை ஆணை, மாற்றுத் திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம்.

முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.


Strategic Sourcing Through Effective Vendor Management

The Coimbatore Productivity Council

Strategic Sourcing Through Effective Vendor Management Programme

The Coimbatore Productivity Council will conduct a one day programme, “Strategic Sourcing Through Effective Vendor Management”.

Those interested may contact S. Ramamurthy, Honorary Secretary.
Ph No: 0422-2215727, 4393727

Date: July 23, 2013
Time: 9.30 a.m. to 5 p.m.
Venue: Council premises, 95-A, Race Course, Coimbatore.