Showing posts with label மகரவிளக்கு கால தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு. Show all posts
Showing posts with label மகரவிளக்கு கால தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு. Show all posts

Tuesday, 15 October 2013

சபரிமலை மண்டல, மகரவிளக்கு கால தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு


சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலத்தில், சுவாமி தரிசனத்துக்கு "ஆன்லைன்' முன்பதிவு, இன்று துவங்குகிறது. 

இந்த ஆண்டு, மண்டல சீசன், நவ., 16ல் துவங்குகிறது. இதையொட்டி, ஆன்லைன் முன்பதிவு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. கேரள போலீசின், www.sabarimalaq.com என்ற இணையதளத்தில், கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்தால், சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கும். விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் அடையாள அட்டைகளையும், பதிவு செய்த பின் கிடைக்கும் கூப்பனையும், சபரிமலைக்கு வரும் போது, எடுத்து செல்ல வேண்டும். பம்பையில் உள்ள கவுன்டரில், இதை பதிவு செய்து, சன்னிதானம் செல்ல வேண்டும். ஆன்லைன் பதிவு முறைக்கும், தரிசனத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.