Showing posts with label இலவச பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி. Show all posts
Showing posts with label இலவச பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி. Show all posts

Friday, 26 July 2013

இலவச பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்

இலவச பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் சார்பில், சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த படித்த வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு இலவச பின்னலாடை பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2014 ஜனவரி 31ம் தேதி வரை ஆறு மாத காலம் அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்குகிறது. பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயதிருக்கவேண்டும். 


நேர்காணல் கடந்த 10ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், பங்கேற்க கல்வி தகுதி சான்றிதழ், கல்வி நிலைய மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவான சான்றிதழ், மூன்று பாஸ் போர்ட் அளவு புகைப்படம், ஐந்து ரூபாய் சுய முகவரி எழுதிய தபால் உறை உள்ளிட்டவைகளோடு பங்கேற்கலாம்.


பயிற்சி காலங்களில், உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0422-2574367/68/69 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Click Here