சுற்றுச்சூழல் விருது: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்கிய தனி நபர்களுக்கும் , நிறுவனங்களுக்கும் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
சென்னை
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அரசு சார்பில் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளது. சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட கல்வி, விழிப்
புணர்வு, பாதுகாப்பு, மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆகவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இவ்விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.
விருதுகளின் விவரம்:
1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பாதுகாப்பு விருது: சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்ட கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள் மற்றும் தனி நபர்கள் இவ்விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.
2. சுற்றுச்சூழல் விருது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் தனி நபர்களோ, நிறுவனங்களோ, கல்வி நிலையங்களோ இவ்விருதிற்காக விண்ணப்பம் செய்யலாம்.
மேற்கண்ட இரண்டு விருதுகளை பெற 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். மேலும் சிறந்த சுற்றுச்சூழல் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிப்பவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவம் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் கிடைக்கும். அதுமட்டுமன்றி www.environment.tn.nic.in என்னும் இணையதளத்திலிருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வருகிற 26.02.2014 வரை மட்டுமே கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களுடன் அதனுடைய 6 நகல் களையும், 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் நூறு ரூபாய்க்கான வரைவோலையையும் உடன் அனுப்புவது அவசியம். விண்ணப் பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 28.02.2014 ஆகும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment