Showing posts with label 23-08-2013. Show all posts
Showing posts with label 23-08-2013. Show all posts

Friday, 23 August 2013

Lecture on wildlife



The Vanavarayar Foundation conducts its 16th lecture of its monthly-lecture series on “Wild Animals of Kongu Region”.

The talk will be delivered by wildlife photographer T.R.A. Arunthavaselvan, who has spent many years photographing the wild in and around this region.

Date: Aug 23, 2013
Time: 6 to 7 p.m.
Venue: Purandaradasar Hall, R.S.Puram, Coimbatore.

Telephone: 99429-86668.

Music Show

Bacardi organises the music show, “Bacardi Weekender”, with the Bangalore-based band Lagori. The band combines Indian classical music with rock music. The show will also feature DJ Vanessa, a guitarist and singer.

Date: Aug 23, 2013
Time: 4 p.m.

Venue: The Residency, Coimbatore.

NPR SMART CARD DRIVE IN COIMBATORE CORPORATION

From August 23, 2013

Zone: North
Ward No. 38 – Corporation Higher Secondary School Pioneer Mill Road, Peelamedu.
Sree Murugan Society Wedding Hall, Peelamedu.
Ward No. 39 – Corporation Primary School, Avaramapalayam Road, Peelamedu.
Ward No. 40 – Corporation Elementary School, Krishnapuram, Shoba Nagar, Avarampalayam.
Corporation Elementary School, E.B.Colony, Ganapathy.
Ward No. 46 – Corporation Primary School,  Ganapathy.

From August 26, 2013

Zone: South  
Ward No. 87 – Government Higher Secondary School Kuniamuthur.
Ward No. 88 – Panchayat Union Middle School, Kuniamuthur.
Ward No. 89 – Perur Panchayat Union Primary School, Ramachettypalayam.
Government Higher Secondary School, Sundakkamuthur.
Ward No. 90 – CBM College, Kovaipudur.
Ward No. 91 – Government Higher Secondary School, kulathupalayam.
Panchayat Union Primary School, Kulathupalayam.

Zone : West
Ward No. 12 – Corporation Primary School, K.K.Pudur.
Ward No. 18 – Panchayat Union Primary School, Om Ganesh Nagar, Lingegoundanpudur.

Ward No. 19 – Panchayat union Middle School Karumalai Chettypalayam Road, Veerakeralam.

Thursday, 22 August 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (23/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

ஸ்மார்ட் கார்டு... (தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்.)

நாளை (23/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம் 

வார்டு 61 (பழைய வார்டு 6) – மாநகராட்சி துவக்கப்பள்ளி நெசவாளர் காலனி, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர்.
வார்டு 62 (பழைய வார்டு – மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
வார்டு 63 (பழைய வார்டு 7) – அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர், ராஜலட்சுமி உயர்நிலைப்பள்ளி, ராஜலட்சுமி மில்ஸ்.
வார்டு 64 (பழைய வார்டு 11 - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வரதராஜபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உப்பிலிப்பாளையம்.
வார்டு 65 (பழைய வார்டு 15) – ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சவுரிபாளையம், மாநகராட்சி சமுதாயக் கூடம், இந்திராநகர், சவுரிபாளையம்.
வார்டு 66 (பழைய வார்டு 14 - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, உடையாம் பாளையம், மாநகராட்சி துவக்கப்பள்ளி, உடையாம்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 11 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 20 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, சீரநாயக்கன்பாளையம்.
வார்டு 21 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, பூசாரிப்பளையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்புதூர்.

தெற்கு மண்டலம்

வார்டு 79 (பழைய வார்டு 50, 52) – பிஷப் உபகாரசாமி உயர்நிலைப்பள்ளி, தடாகம் ரோடு.
வார்டு 85 (பழைய வார்டு 42) – மாரண்ண கவுடர் பள்ளி, செல்வபுரம்.
வார்டு 86 (பழைய வார்டு 54) – மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கல்லாமேடு (முத்துசாமி காலனி), மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கரும்புக்கடை.

ஊராட்சி ஒன்றிய பகுதிகள்

குருடாம்பாளையம் கதிர்நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஆரம்ப பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளி.

அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹரி ஓம் பள்ளி.

பட்டுப்புழு வளர்ப்பு பயிலரங்கு

பட்டு வளர்ச்சித்துறை

பட்டுப்புழு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிலரங்கம் கோவை பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நடக்கிறது. இதில் பட்டு விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.

நாள்: ஆகஸ்டு 23, 2013
இடம்: பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம்,

பாலசுந்தரம் சாலை, கோவை. 

Wednesday, 21 August 2013

பள்ளிகளில் செஸ் போட்டி 23ல் துவக்கம்

மாநிலத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் வருகின்ற 23ம் தேதி செஸ் 
போட்டிகள் நடக்க உள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்களின் திறமையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்கு சிந்திக்கும் திறனை மேம்படுத்துவது அவசியம் என்ற நோக்கில் 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உபகரணங்களும் அனைத்து பள்ளிகளுக்கும் 
வழங்கப்பட்டுள்ளது. மேலும், செஸ் விளையாட்டு குறித்த பயிற்சிகள் மாநில, மாவட்ட அளவில் ஆசிரியர்
களுக்கு வழங்கப்பட்டதுடன் மாணவர்களும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


தற்போது, ஒவ்வொரு பள்ளிகளிலும் வரும் 23ம் தேதி செஸ் போட்டிகள் நடத்தவேண்டும் என்று தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இப்போட்டிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி சுமார் 45 ஆயிரம் பள்ளிகளில் இப்போட்டிகள் மாநிலம் முழுவதும் நடக்க உள்ளது.



Monday, 19 August 2013

பிளஸ் 2 படித்தவர்களுக்கு பழகுனர் பயிற்சிக்கு வாய்ப்பு

கோவையில் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி படித்து வெளியேறிய மாணவ மாணவியர்களுக்கு, பழகுனர் பயிற்சிக்கான நேர்காணல், பெரியகடைவீதி புனித மைக்கேல் மேல்நிலை பள்ளியில் ஆக., 23ல் நடக்கிறது.

சென்னை "போர்ட் ஆப் அப்ரன்டிஸ்ஷிப் டிரெயினிங்' இயக்குனரால், சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதலின் படி நேர்காணல் நடக்கிறது. இந்த நேர்காணல் முகாமில் அரசு போக்குவரத்துக்கழகம், பி.எஸ்.ஜி.,மருத்துவமனை, ஐ.ஓ.பி.,வங்கி, தாய்கோவங்கி, பிரேக்ஸ் இந்தியா, என்.எஸ்.ஐ,சி., போன்ற முன்னனி நிறுவனங்கள் பங்கேற்று, மாணவர்களை தொழிற்பயிற்சிக்காக தேர்வு செய்கின்றன.



இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி பயின்ற மாணவ மாணவ மாணவியர் தங்களைப்பற்றிய சுயவிபரம்,பிளஸ் 2 தேர்வு பெற்றதற்கான சான்று, அதன் இரு நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்களின் ஆக., 23 காலை 8.00 மணிக்கு மைக்கேல் பள்ளியில் ஆஜராக வேண்டும்.

ஸ்மார்ட் டெக் விசார்டு - 2013





ஸ்மார்ட் டெக் விசார்டு - 2013

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி. எஸ்.,') நிறுவனம் சார்பில், "டி.சி.எஸ்., ஐடி விஸ் - 2013' போட்டிகள் கோவையில் வரும் 23ம் தேதி துவங்குகிறது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப, ஆலோசனை மற்றும் வர்த்தக நிறுவனமான டி.சி.எஸ்., நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே வினாடி- வினா போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு "ஸ்மார்ட் டெக் விசார்டு' தேடலுக்கான போட்டிகள் டில்லி, பெங்களூரு, சென்னை, கோவை உட்பட 14 முக்கிய நகரங்களில் நடக்கின்றன.


கோவையில், குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரியில் வரும் 23ம் தேதி போட்டி துவங்குகிறது. தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த அனைத்து கேள்விகளும், இதில் கேட்கப்படுகிறது. 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கு, ஐடி விஸ் ஒருங்கிணைப்பாளர், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், 51, காளிங்கராயர் தெரு, ராம்நகர், கோவை-641 009 என்ற முகவரிக்கு தபாலிலோ, www.tcsitwiz. com என்ற இணையதளத்திலோ பள்ளிகள் வாயிலாக பதிவு செய்யலாம். 



மேலும் விபரங்களுக்கு 0422 2231010,11,12 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.