Saturday 18 May 2013

விஜயநகர மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்களின் படக்கண்காட்சி



விஜயநகர மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்களின் படக்கண்காட்சி

விஜயநகரை ஆண்ட மன்னர்கள் வழிபட்ட வைணவ, சைவ சமய கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட தங்கம், செம்பு நாணயங்களின் படங்கள், அரசு அருங்காட்சியகத்தில் நடக்கும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

ஆந்திர மாநிலம் தொங்கபத்ரா நதி முதல் கன்னியாகுமரி வரை மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்அம்மன்னர்களின் கலாசாரம், பண்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில், விஜயநகரின் முதல் அரசரான ஹரிஹராவை தொடர்ந்து ஆட்சி செய்த ரங்கராயா, கிருஷ்ண தேவராயர் உட்பட பல மன்னர்கள், வாணிபம், பண்டமாற்று முறைகளுக்கு பயன்படுத்திய தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் ஹரிஹர மன்னர் வெளியிட்ட அனுமன் உருவம் ஒருபுறமும், கன்னட எழுத்துக்கள் மறுபுறமும் பொறிக்கப்பட்ட தங்க நாணயம், இரண்டாம் ஹரிஹரனின் விஷ்ணு உருவம் மற்றும் கருட வாகனம் பொறிக்கப்பட்ட தங்க நாணய படம், பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

கிருஷ்ண தேவராயர் பயன்படுத்திய விஷ்ணு அமர்ந்த நிலை, திருமலைராயரின் வெங்கடேஷ்வர் நின்ற நிலை மற்றும் விஷ்ணு அமர்ந்த நிலையுடனான கன்னட எழுத்து, தேவராயா பயன்படுத்திய வெங்கடேஷ்வரருடனான நாகரி எழுத்து, சிவன், யானை உருவம் பதித்த வராகா நாணயங்களும், பறவை உருவம் பதித்த தங்கம், செம்பு நாணய படங்களும் வரலாற்றை சித்தரிக்கின்றன. சதாசிவராயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிவன், பார்வதி உருவம் பதித்த, நாகரி எழுத்துக்களுடனான சங்க நாணயங்களும் இடம் பெற்றுள்ளது.

நாள்: மே 17 முதல் 31 வரை
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: நேரு ஸ்டேடியம் அருகேயுள்ள அருங்காட்சியகம், கோவை.

(அனுமதி இலவசம்)

No comments:

Post a Comment