Showing posts with label College admission. Show all posts
Showing posts with label College admission. Show all posts

Saturday, 28 September 2013

கல்லூரி அட்மிஷன் 30ம் தேதி கடைசி

அரசு கலை அறிவியல் கல்லூரி, கோவை

கல்லூரி அட்மிஷன்30ம் தேதி கடைசி

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு வரும் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்களை பட்டப்படிப்பில் டிபன்ஸ், முதுநிலை பட்டப்படிப்பில் அரசியல் அறிவியல் மற்றும் சுற்றுலா நிர்வாகம், எம்.பில்., முழுநேர படிப்பில் பொருளாதாரம், இயற்பியல், புவியியல், பி.எச்.டி., முழுநேர படிப்பில் தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகள் நடப்பாண்டு துவங்கப்பட்டுள்ளது. இப்பாடங்களுக்கான இடங்கள் பெரும்பாலும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இளநிலை டிபன்ஸ் பாடத்தில் மொத்தம் உள்ள 40 இடங்களுக்கு இதுவரை 35 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல், முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவிலுள்ள 20 இடங்களுக்கு 18 பேரும், சுற்றுலா நிர்வாகம் பாடத்தில் உள்ள 25 இடங்களுக்கு 23 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு வரும் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Click Here