Showing posts with label 22-10-2013. Show all posts
Showing posts with label 22-10-2013. Show all posts

Tuesday, 22 October 2013

கோவையில் 12 ரயில்வே மேம்பாலங்கள்

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 12 ரயில்வே மேம்பாலங்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன என பி.ஆர்.நடராஜன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மெட்ரோ திட்டம் ஆய்வு

தில்லி மெட்ரோ திட்ட முன்னாள் இயக்குநர் ஸ்ரீதரன் வரும் 24ம் தேதி கோவை வருகிறார். 25ம் தேதி கோவையில் மெட்ரோ திட்டம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

கோவை-திருப்பூர், கோவை-மேட்டுப்பாளையம், கோவை-பொள்ளாச்சி, கோவை-பாலக்காடு ஆகியவை 40லிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளதால், இப்பகுதியில் மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இவ்வளவு தூரத்திற்கு இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. எந்த அளவிற்கு முடியுமோ அதை நடைமுறைப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.


மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், தொழில் வர்த்தகக் கூட்டமைப்புகள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றார் நடராஜன்.

Monday, 21 October 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (22-10-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.) 

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

வடக்கு மண்டலம்

வார்டு 27: ராமாநத்த அடிகளார் மேல்நிலைப்பள்ளி, சின்னவேடம்பட்டி.
வார்டு 28: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, சின்னமேட்டுப்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சரவணம்பட்டி.
வார்டு 29: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சிவானந்தபுரம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, ஜனதா நகர், சரவணம்பட்டி.
வார்டு 30: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, எல்.ஜி.பி., நகர், சரவணம்பட்டி.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, ஷாஜகான் நகர், சரவணம்பட்டி.
வார்டு 31: அரசு மேல்நிலைப் பள்ளி, சரவணம்பட்டி.
வார்டு 42: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, உடையாம்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சின்னவேடம்பட்டி.

Saturday, 19 October 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு

மாநில அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் 2,881 இடங்கள் உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஜூலை 21ம் தேதி நடந்தது. 

இத்தேர்வில், தமிழ் பாடத்துக்கான கேள்வித்தாளில் எழுத்துப்பிழைகள் இருந்த காரணத்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ் பாடத்திற்கான தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டது.


தமிழ் அல்லாத பிற பாடங்களுக்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. 


சான்றிதழ் சரிபார்ப்புக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் பணி கோவை உட்பட 14 மாவட்டங்களில் நடக்க உள்ளது.



சான்றிதழ் சரிபார்ப்பு தேதி: அக். 22 & 23, 2013