Showing posts with label 01-08-2013. Show all posts
Showing posts with label 01-08-2013. Show all posts

Thursday, 1 August 2013

Coaching classes

The Directorate of Employment and Training 
The Directorate of Employment and Training is conducting coaching classes here for candidates who want to appear for the TNPSC Group IV examination.

The classes started two weeks ago and would be on till August 7. The model question papers were also distributed on Tuesday. Study circles were conducted throughout the year.

The Directorate made arrangements for resource materials and faculty to conduct the classes. These were held for two hours every day and the study circle on Saturdays. Some candidates attend the study circles for several months to prepare for the examinations.


Tuesday, 30 July 2013

ஆதார் அடையாள அட்டை... நாளை (01/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம்



வார்டு 37 (பழைய வார்டு 3) - தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) - பீளமேடுபுதூர் மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி 
வார்டு 57 (பழைய வார்டு 10) - ன்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) - காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
வார்டு 60 (பழைய வார்டு 5) - ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு மற்றும் வடக்கு

மேற்கு மண்டலம்

வார்டு 13 (பழைய வார்டு 61) - மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
வார்டு 14 (பழைய வார்டு 60) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர். 

தெற்கு மண்டலம்

வார்டு 76 (பழைய வார்டு 55) - முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும் செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) - செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) - செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி.


பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி

வார்டு எண். 1,2,3 - ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 4,5,13 - கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 6,7,8,9,10,11,12,14,15 - ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு எண். 16,17,18 - பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி

முகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், காலதாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர் உதவித்தொகை ஆணை, மாற்றுத்திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம். முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

Thursday, 25 July 2013

ரோட்டரி கிளப் - தொழிற்சாலை சாதனையாளர் விருது வழங்கும் விழா


கோயம்புத்தூரின் வரலாற்று சிறப்பு மிக்க அமைப்புகளுள் ஒன்று கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம். 1944-ல் துவக்கப்பட்டது. ஜிடி நாயுடு, ஆர்.கே. சண்முகம் செட்டியார் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் அங்கம் வகித்த அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் தத்தம் துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள். 

அவ்வகையில் 500-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தவரும், புத்தக விற்பனையில் பல்வேறு புதுமைகள் செய்து தமிழ் வாசகப் பரப்பினை அதிகரிக்கச் செய்தவரும், தீவிர இலக்கிய ஆர்வலருமான விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு. வேலாயுதம் அவர்களுக்கு ‘தொழிற்துறை சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது.

நான் கோவைக்குப் பிழைக்க வந்த ஆரம்ப நாட்களிலேயே அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்து விட்டது. திக்கு தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவர் பதிப்பித்து வெளியிடும் கோவை டைரி உதவியாக இருந்தது. விகடனில் வேலைக்குச் சேர்ந்த நாட்களில் நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் துணையெழுத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அறிமுக கூட்டமே நான் பார்வையாளனாக கலந்து கொண்ட முதல் கூட்டம். அவரது கடையில்தான் முதன் முதலில் நாஞ்சில் நாடனை சந்தித்தேன். முதன்முதலில் ஜேகே எனும் சிங்கத்தின் கர்ஜனையை அவர் ஏற்பாடு செய்திருந்த ஞானபீட விருது பாராட்டுக்கூட்டத்தில்தான் கேட்டேன்.

ஒவ்வொரு சந்திப்பிலும் அவரது அனுபவத்திலிருந்து சுவையான சம்பவங்கள் சிலவற்றை, தான் மிகவும் ரசித்த இலக்கியப் பிரதியை, எழுத்தாளுமைகள் பற்றிய அறியப்படாத தகவல்களைப் பகிர்ந்துகொள்வார். மதுரை - திண்டுக்கல் சாலையில் பஞ்சர் ஒட்டும் சுப்பிரமணி என்பவரது தொழில் ஈடுபாடு குறித்து இவர் சொன்ன ஒரு சிறிய சம்பவத்தை பல நூறு பேர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். அவரோடு பேசுவது ஒரு ஸ்பூனில் உற்சாகத்தை எடுத்து உண்பது போல. 

படைப்பாளிகள் உரிய முறையில் கவுரவிக்கப்பட வேண்டுமென்பதில் பிடிவாதமானவர். 1996-முதல் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுவிழாக்கள் எடுத்து வருகிறார். கவனிக்கப்பட வேண்டிய படைப்பு என தீர்மானித்து விட்டால் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் கோவையில் அறிமுக விழாக்கள், விமர்சன அரங்குகளுக்கு ஏற்பாடு செய்வார். சமீபத்திய சந்திப்பின்போது கூட கோவைக்கு அதிகம் வராத விட்டல்ராவ், பாவண்ணன், இமயம் போன்ற எழுத்தாளர்களை அழைத்து வரவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார். வாசிப்பை ஊக்கப்படுத்த இன்னும் ஏகப்பட்ட யோசனைகள் வைத்திருக்கிறார். ’அழுதுக்கிட்டு இராதே... உழுதுக்கிட்டு இரு’ என அப்பா அடிக்கடி சொல்வார். எவன் சார் இந்தக் காலத்துல எலக்கியம் படிக்கிறானென ஒருபோதும் வேலாயுதம் புலம்பியதில்லை. உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி - வியாழக் கிழமை முனைவர். வெ. இறையன்பு இ.ஆ.ப., (அரசு முதன்மைச் செயலர் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் (பயிற்சி) துறை ) அவர்களது முன்னிலையில் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

Friday, 19 July 2013

National consultation on HIV/AIDS



National consultation on HIV/AIDS 

Native Medicare Charitable Trust will organise a National Consultation on HIV / AIDS to submit recommendations to the Government on issues of care and support for those living with HIV / AIDS.

Rahman Khan, Union Minister for Minority Affairs, Stefan Weckbach, Consul General, German Consulate, Chennai, and Rajendra Ratnoo, Project Director, TANSACS, will be present during the inauguration.

Indira Jaising, Additional Solicitor General, and Anand Grover, Director, Lawyers Collective, and United Nations representative, will be the guests of honour for the valediction.

The main issues that will be dealt with include, stigma, discrimination and challenges associated with those living with HIV /AIDS, and enabling them lead a dignified life in society.

The forum will also share best practices adopted in care and support programmes in India and strengthening HIV testing, counselling, care, support and treatment services.

Those interested in participating, can register on www.nmctngo.org

Date: August 1 to 3, 2013
Venue: Karl Kubel Institute for Development Education, Coimbatore.