Showing posts with label பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. Show all posts
Showing posts with label பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. Show all posts

Wednesday, 24 July 2013

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, இணைய தளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.நிலம் வாங்குதல் (பெண்கள் ), 2.நிலம் மேம்படுத்தல் - இருபாலாருக்கும், 3.தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் அல்லது தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி மற்றும் தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி -1, முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, மேலும், பட்டயக் கணக்கர் / செலவுக் கணக்கர்களின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து ஆதிதிராவிடர்களாக இருத்தல் வேண்டும். 18 முதல் 55 வரை, விதவைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வயது வரம்பு இல்லை. தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி -1 (டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1), முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி பெறுவதற்கு வயது 21 நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டயக் கணக்கர்/செலவுக் கணக்கர்களுக்கு நிதியுதவி பெறுவதற்கு வயது வரம்பு 25 முதல் 45.

இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்புவோர், http://application.tahdco.com என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.