Showing posts with label பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி. Show all posts
Showing posts with label பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி. Show all posts

Friday, 13 September 2013

பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி

பெங்களூரு தகவல் தொழில்நுட்ப பின்னேற்பு பணி நிறுவனம், கடந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. இதில் பங்கேற்க, வணிகவியல், வணிக மேலாண்மை, கணிதம், ஆங்கிலம் மற்றும் பிற அறிவியல் பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.சி.ஏ., முதுகலை மற்றும் இன்ஜி., மாணவர்கள் பங்கேற்க இயலாது. ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் ஆங்கில பேச்சாற்றல், கணிதம், போட்டித் தேர்வு திறன் குறித்த பயிற்சியளிக்கப்படும்; பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சியின் இறுதியில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு கடிதம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், சுயவிபரக் குறிப்பை வரும் 23ம் தேதிக்குள் பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டி துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.