Showing posts with label கலைநய கண்காட்சி. Show all posts
Showing posts with label கலைநய கண்காட்சி. Show all posts

Monday, 23 September 2013

கலைநய கண்காட்சி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் கோவை மகளிர்திட்டம், புதுவாழ்வுத்திட்டம் மற்றும் கே.பி.ஆர்.ஸ்கூல் ஆப் பிசினஸ் இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உற்பத்திப்பொருட்களின் பொருட்காட்சி மற்றும் விற்பனை மேளா அக்., 3 முதல் 5ம் தேதி வரை, அரசூரிலுள்ள கே.பி.ஆர்., வர்த்தக மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் செயற்கை நகைகள், அழகிய கைப்பைகள், வாசனை திரவியங்கள், மென்பொம்மைகள், ஆடை-ஆபரணங்கள், அழகு சாதனப்பொருட்கள், கலைநயம் மிக்க ஓவியங்கள், கைவினை பொருட்கள் இடம்பெற உள்ளன.