Thursday, 21 November 2013

பாரதி பல்லாயிரம்


மகாகவி பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி

பாரதி பல்லாயிரம் - பேச்சு, கவிதை போட்டிகள்

மகாகவி பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி இணைந்து பாரதி பல்லாயிரம் என்ற தலைப்பில் பேச்சு, கவிதை போட்டிகள் நடத்துகின்றன. இதில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.

போட்டியின் முதல் சுற்றில் தேர்வாகும் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்.

பேச்சுப்போட்டி முதல் சுற்றுக்கான தலைப்புகள்:

1.   பாரதி பாடிய பாரதி (பாரதி தன்னுடைய பாடல்களில் தன்னைப் பற்றிக் கூறியவை)
2.   பாரதி காட்டும் தொழில் உலகம்
3.   பாரதி பாடிய பெரியோர்

கவிதைப்போட்டி முதல் சுற்றுக்கான தலைப்புகள்:

1.   போட்டி நாளன்று காண்பிக்கப்படும் புகைப்படத்தை, பாரதி கண் கொண்டு பார்த்து எழுத வேண்டும்
2.   மரபுக் கவிதை
3.   புதுக்கவிதை

கல்லூரி சார்பாக ஒரு போட்டியில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரே மாணவர் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

நாள்: டிச.1, 2013 (முதல் சுற்று), டிச.11, 2013 (இறுதி சுற்று)
நேரம்: காலை 9 மணி
இடம்: டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோவை.



துரந்தோ ரயில் சதாப்தி ரயிலாக மாற்றம்

சென்னை – கோவை இடையே இயக்கப்பட்டு வந்த இடை நிறுத்தம் இல்லாத துரந்தோ ரயில் சேவை, சதாப்தி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை வரும் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும்.


சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பகல் 2.05 மணிக்கு கோவைக்கு வந்து சேரும்.  மீண்டும் கோவையிலிருந்து பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு சென்னையை சென்றடையும்.

Kriya Yoga


Mahavatar Trust

Kriya Yoga by Swami Samarpananda

Date: Dec 7th – Introductory Lecture (6pm to 8pm)
Date: Dec 8th – Kriya Yoga Initiation & Guided Meditation ( 8 am to 5 pm)
Venue:  Sindhu Sadan Hall,
11, 1st Floor, Sir C.V.Raman Road, R.S.Puram, Cbe-2.


For registration, e-mail to mahavatartrust@gmail.com

Free Mock Group II Exam


Shankar IAS Academy

Free Mock Group II Exam

Shankar IAS Academy is conducting a free mock Group II exam. Over 600 students will be attending this exam. So compete yourself against the best by registering with them.

Date: 24.11.2013 (Sunday)
Venue: Shankar IAS Academy, Coimbatore.
Ph: 0422-4380834, 9489222761

Wednesday, 20 November 2013

Bharat Sangeet Utsav 2013


வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டு புதுப்பிக்க வாய்ப்பு

வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டு தாரர்கள், ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள அரசு இணையதளத்தில் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

http:/210.212.62.90:8080/newfco/cardvalidity.do என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய ரேஷன்கார்டு தாரர்கள்; ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம். மேற்சொன்ன இணையதள முகவரியில் சென்று குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்தால் அதில் ரேஷன்கார்டுக்கான காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு வரும். அதை அப்படியே பதிவிறக்கம் செய்து ரேஷன்கார்டில் ஒட்டிக்கொள்ளலாம். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள "N' ரேஷன்கார்டுகள் புழக்கத்திலுள்ள ரேஷன்கார்டுகளாகவே கருதப்படும்.

இணையதள வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன்கார்டு தாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் மாதந்தோறும் நடத்தப்படும், பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டத்தில் ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.



இன்டர்நெட் முகவரியில் புதுப்பிக்க கடைசி நாள்: 31.01.2014 

Interactive session

Coimbatore Indo-German Cultural Association

Interactive session on “Living a Better Life” by Dr. Ananth S.

Date: Nov 23, 2013
Time: 6 p.m.
Venue: Gedee Auditorium, President Hall,
734, Avinashi Road, Coimbatore – 18.

Telephone: 0422-4214567 / 99524-11371