Showing posts with label பத்ம விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு. Show all posts
Showing posts with label பத்ம விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு. Show all posts

Saturday, 3 August 2013

பத்ம விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

வரும் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனுப்புமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்காக, குடியரசு தினத்தன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று நிலைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டுக்கு வழங்கப்படவுள்ள விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பரிந்துரைகளை, உரிய படிவத்தில் கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களையும் இணைத்து அளிக்குமாறு, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் விண்ணப்பங்களை, "செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை -9' என்ற பெயருக்கு வரும் ஆக., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவங்களைhttp://mha.nic.in மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்திலும் எடுத்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த விருதுக்கென அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர்.