Showing posts with label கோவையில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில்அரசு சலுகை பெற வாய்ப்பு. Show all posts
Showing posts with label கோவையில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில்அரசு சலுகை பெற வாய்ப்பு. Show all posts

Saturday, 3 August 2013

கோவையில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில்அரசு சலுகை பெற வாய்ப்பு

உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினர்கள் அரசு சலுகைகளை பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள நபர்களுக்கு, உறுப்பினர் சார்ந்த நபர்களின் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை; உறுப்பினர் மற்றும் அவரைச்சார்ந்த நபர்களுக்கு விபத்து மரணம், இயற்கை மரணம் நிகழ்ந்தால் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இது தொடர்பாக உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா சமூக பாதுகாப்புத்திட்டதாசில்தாரை அணுகி விண்ணப்பங்கள் அளித்து பயனடையலாம்..